நகரத்தில் பிறந்து
அடுக்குமாடிக் குடியிருப்பில் வளர்ந்து
செடி, கொடிகள் மற்றும் பறவைகளைக் கூட
புத்தகத்தில் மட்டுமே பார்த்து
உதவிக்குக் கூட அண்டை வீட்டுக்
கதவுகள் மூடியபடி இருந்து
பணியிடத்திலும் கூட மனம் விட்டு
பேச முடியாமல் வாழ்ந்து
அலுத்து போன நண்பிக்கு
ஓட்டு வீடுகளாய் எளிமையாய் இருந்தாலும்
இயற்கையோடு இணைந்து
அண்டை அயலாருக்கு உதவி செய்து
நாட்டு மக்களின் உணவுத் தேவையை
பூர்த்தி செய்யும் கிராம மக்கள்
மாறுபட்ட மனித தெய்வங்களாய் தெரிந்தனர்! ! !